தமிழ்நாடு
ரஜினி, விஜய், அஜித் ரசிகர்களுக்கு ஐஸ் வைத்த ஸ்டாலின்!
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் பிரச்சாரம் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னையில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ரஜினி அஜீத் விஜய் படங்கள் தனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார்
இது குறித்து அவர் மேலும் கூறும்போது ’தரமான தமிழ் படங்களை தொடர்ந்து நான் பார்ப்பேன் என்றும், குறிப்பாக ஸ்டைல் நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் தான் என்றும், அவரது படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார்
மேலும் இளைஞர்களை கவரக்கூடிய வகையில் இருப்பதால் விஜய் படங்கள் எனக்கு பிடிக்கும் என்றும் நவரசம் கலந்த நடிப்பால் அஜித்தை எனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார். கடைசி நேரத்தில் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களின் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக இதுவரை அவர்கள் குறித்து வாயே திறக்காத ஸ்டாலின் தற்போது அஜித், விஜய், ரஜினி குறித்து தனது தேர்தல் உரையில் குறிப்பிட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.