தமிழ்நாடு
100 நாட்களில் வாக்குறுதி நிறைவேற்றிக் காட்டுவேன் – மு.க.ஸ்டாலின் பாணியில் கமல் பிரச்சாரம்!
![Kamal Haasan - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/Kamal-Haasan.jpg)
கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார்.
தான் போட்டியிடும் கோவை தொகுதியிலும், மற்றும் தமிழகத்தின் பிற தொகுதிகளிலும் தொடர்ந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் கமல்.
இந்நிலையில் தன் சொந்த தொகுதியில் பிரச்சாரம் செய்த கமல், ‘நான் இந்த தொகுதிக்கு நிறைவேற்றுவேன் என்று கொடுத்த வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்றிக் காட்டுவேன்.
அனைத்து விஷயங்களையும் 100 நாட்களில் நிறைவேற்றி விட முடியாது. எதையெல்லாம் அடிப்படையாக செய்ய முடியுமா அவை அனைத்தையும் கட்டாயம் என்னால் நிறைவேற்றிக் காட்ட முடியும்.
உங்கள் உதவியுடன் அதை நான் செய்து காட்டுவேன். ஒரு அரசியல், அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக நான் இருப்பேன். தமிழகத்தின் முன் மாதிரி தொகுதியாக கோவை தெற்குத் தொகுதியை நான் மாற்றிக் காட்டுவேன்’ எனக் கூறியுள்ளார்.