தமிழ்நாடு
அதிமுக பெண்களுக்கு பாதுகாப்பா? மோடிக்கு ஸ்டாலின் பதிலடி
தமிழகத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி அதிமுக மற்றும் பாஜக பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்றும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி பெண்களுக்கு எதிரான கட்சிகள் என்றும் பேசினார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது ஆசிட் வீசப்பட்டது குறித்து அதிமுகவிடம் பிரதமர் மோடி கேட்க வேண்டும் என்றும் அதிமுகவின் பெண்கள் பாதுகாப்பு குறித்து பிரதமர் கூறிய கருத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமிக்கு அதிமுக மகளிரணி கொடுத்த வரவேற்பு மோடிக்கு தெரியுமா? சொல்வதற்கு எனக்கு நாக்கு கூசுகிறது என்று தெரிவித்தார். எனவே பெண் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது, அதிமுகவின் பெண்கள் பாதுகாப்பு பற்றி அவர்களிடமே கேளுங்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.