Connect with us

தமிழ்நாடு

காலமும் சரியில்லை, களமும் சரியில்லை: தேர்தலில் போட்டியிடாதது குறித்து டி ராஜேந்தர் அறிக்கை

Published

on

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை நடத்தி வரும் டி ராஜேந்தர் வரும் தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். மேலும் வரும் தேர்தலில் தனது கட்சி யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மறைந்த முன்னாள்‌ முதல்வர்‌, அம்மா காலத்திலிருந்து தொடங்கி இந்நாள்‌ துணை முதல்வர்‌, அண்ணா தி.முக.வின்‌ ஒருங்கிணைப்பாளர்‌ மாண்புமிகு திரு.ஓ.பி.எஸ்‌. அய்யா அவர்கள்‌ என்‌ நீண்ட நாள்‌ நண்பர்‌ ஆவார்‌.
நடைபெறும்‌ இந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்‌ தொடங்குவதற்கு முன்பு மாண்புமிகு ஒ.பி.எஸ்‌ அய்யா அவர்கள்‌, என்னை அழைத்தார்‌, சென்றேன்‌. மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்‌.

கையில்‌ பூங்கொத்து ஒன்றை தந்தேன்‌
கண்ணியமாய்‌ விடைபெற்று வந்தேன்‌
மறைந்த முதல்வர்‌ அம்மா அவர்கள்‌ இல்லாமல்‌
அண்ணா தி.மு.க. சந்திக்கின்ற முதல்‌ சட்டமன்ற தேர்தல்‌ களம்‌…..
அதைப்போல்‌ மறைந்த முன்னாள்‌ முதல்வர்‌ கலைஞர்‌ அவர்கள்‌
இல்லாமல்‌ தி.மு.க சந்திக்கின்ற முதல்‌ சட்டமன்ற தேர்தல்‌ களம்‌…
இரண்டு கட்சிகளுக்குமே இருக்கிறது அவரவர்‌ பலம்‌.
இதைத்தவிர கூட்டணியென்று சேர்த்திருக்கிறார்கள்‌ பக்க பலம்‌.
அதைத்‌ தவிர அவர்களிடத்தில்‌ இருக்கிறது பல பலம்‌.
இரண்டு கட்சிகளுமே பார்த்துக்‌ கொள்ளப்போகிறது பலப்பரிட்சை.
இதில்‌ நான்‌ போய்‌ என்ன செய்யப்‌ போகிறேன்‌. புது சிகிச்சை.
ஒருவருடைய வாக்கு வன்மை, அவர்‌ வார்த்தையில்‌ இருக்கும்‌ தன்மை,
அதில்‌ வெளிப்படும்‌ உண்மை. அதற்கு ஒரு சக்தி இருக்கிறது என்று
சில முன்னாள்‌ முதல்வர்கள்‌ நம்பினார்கள்‌. அதன்‌ அடிப்படையில்‌
என்னை தேர்தல்‌ பிரச்சாரத்திற்கு அழைத்தார்கள்‌. அது ஒரு காலம்‌.
கொள்கையை சொல்லி ஒட்டு கேட்டதெல்லாம்‌ அந்தக்‌ காலம்‌.
கொடுக்க வேண்டியதை கொடுத்து ஓட்டு வாங்கிக்‌ கொள்ளலாம்‌ என்பது இந்தக்‌ காலம்‌.
காலமும்‌ சரியில்லை. களமும்‌ சரியில்லை கரையில்‌ ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்க்கலாம்‌ என்று முடிவெடுத்து விட்டேன்‌.

பத்தும்‌ பத்தாதற்கு இது கொரோனா காலம்‌.
பாதுகாப்பு வேண்டுமென்றால்‌ அணிந்து கொள்ள வேண்டும்‌ முகமூடி.
பக்குவப்பட்டவனாய்‌ வாழ வேண்டுமென்றால்‌ அமைதி காக்க வேண்டும்‌ வாய்மூடி.

இந்த சட்டமன்ற தேர்தலில்‌ எங்கள்‌ இலட்சிய தி.மு.க நாங்கள்‌ யாரையும்‌ ஆதரிக்கவும்‌ இல்லை, அரவணைக்கவும்‌ இல்லை. நடுநிலைமையோடு இருக்க விரும்புகிறோம்‌. நாடும்‌, நாட்டு மக்களும்‌ நல்லா இருக்க வேண்டுமென்று எல்லாம்‌ வல்ல இறைவனிடம்‌ பிரார்த்திக்கிறோம்‌.

இவ்வாறு டி ராஜேந்தர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தியா4 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!