Connect with us

தமிழ்நாடு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்!

Published

on

திமுக கூட்டணியில் இடம்பெற்று ஆறு தொகுதிகள் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சற்றுமுன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

தலித்துக்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாடுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் மேற்கொள்ளும் தனியார்மயப்படுத்துதல் போன்ற அனைத்து வகையான முயற்சிகளும் முறியடித்து சமூகநீதியைப் பாதுகாப்போம்.

இந்துராஷ்டிரியத்தை அமைக்க தடையாக இருக்கவும் அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் பாஜகவின் செயல்களை அம்பலப்படுத்துவோம். இதற்காக அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி போராடுவோம்.

ஏகாதிபத்தியச் சார்பு பொருளாதாரக் கொள்கைகளையும் அதனடிப்படையிலான தனியார்மயமாதல் அல்லது கார்ப்பரேட்மயமாதலையும் தடுத்துநிறுத்த தொடர்ந்து மக்களை அரசியல்மயப்படுத்துவோம்.

மொழிவழி தேசியம், மாநில உரிமைகள் மற்றும் மாநில சுயாட்சி ஆகியவற்றைப் பாதுகாத்து கூட்டாட்சி முறையைப் பாதுகாப்போம்.

மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும் மேம்பாட்டையும் உறுதிப்படுத்த, 50 சதவிகிதம் பிரதிதிநித்துவம் அளிக்கும் வகையிலான இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்படும்.

சாதி, மதத்தின் பெயரால் இங்கே தொடர்ந்து விதைக்கப்பட்டு வரும் வெறுப்பு அரசியலையும் அதனடிப்படையிலான சமூகப்பிரிவினைப் போக்குகளையும் தடுத்திட அனைத்து தரப்பு உழைக்கும் மக்களையும் அணித்திரட்டப்படுவர்.

முற்போக்கு ஜனநாயக சக்திகளைத் தீவிரவாதிகள், தேசவிரோதிகள், மாவோயிஸ்டுகள் என முத்திரைகுத்தி, அவர்களுக்கு எதிராக ஏவப்படும் அரச பயங்கரவாத ஒடுக்குமுறைகளை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடுவோம்.

‘ஒரேதேசம் – ஒரேகல்வி’ என்ற அடிப்படையில், தேசிய கல்விக் கொள்கையை
வரையறுத்து, அதன்மூலம் ‘ஒரே மதம் – ஒரே மொழி ஒரே கலாச்சாரம்’ என்ற செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த, பாஜக மேற்கொள்ளும் முயற்சிகளை மக்கள் துணையுடன் முறியடிப்போம்.

அரசுகளே கல்விக் கொள்கையை வரையறுக்கும் வகையில் கல்வி தொடர்பான அதிகாரங்களை மாநிலங்களுக்கான பட்டியலில் இடம்பெற செய்ய முயற்சிப்போம்.

விவசாயிகள், தொழில் முதலீட்டாளர்கள் ஆகியோரை பாதிக்கும் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த விடமாட்டோம்.

நீர், நிலம், காற்று ஆகியவற்றை நஞ்சாக்கிப் பாழ்ப்படுத்தும் வகையிலான ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்துப் போராடுவோம்.

பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் சிறுபான்மையினர். மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் நலன்களையும் மேம்பாட்டையும் பாதுகாத்திட தொடர்ந்து பாடுபடுவோம்.

கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை கட்டணமின்றி வழங்கிடவும் மற்ற இலவச திட்டங்களை முற்றாக ஒழித்திட மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.

ஈழத்தமிழர் நலன்களில் அக்கறையுள்ள அனைத்து சனநாயக சக்திகளோடும் இணைந்து தொடர்ந்து உரிய களப்பணிகளை மேற்கொள்வோம்.

தேசிய இனவிடுதலை கருத்தியலில் நம்பிக்கையுடைய ஜனநாயக சக்திகளோடு இணைந்துநின்று, ஈழத்தமிழருக்கு ஆதரவாக இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவர உரிய முயற்சிகளை மேற்கொள்வோம்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சட்டத்துக்கு தடை விதிக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விசிகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!