சினிமா செய்திகள்
’அந்தகன்’ படத்தில் இவர் தான் ஹீரோயின்: அப்ப சிம்ரனுக்கு என்ன கேரக்டர்?
பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் தயாரித்து இயக்கும் திரைப்படம் ’அந்தகன்’ . இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் இந்த படத்தில் சிம்ரன், வனிதா விஜயகுமார் உள்பட ஒரு சிலர் இணைந்தார்கள் என்பதும் தெரிந்ததே.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடிகை பிரியா ஆனந்த் இணைந்துள்ளார். இவர் பிரசாந்துக்கு ஜோடியாகவும் அந்தாதுன் படத்தில் ராதிகா ஆப்தே நடித்த கேரக்டரிலும் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
அப்படி என்றால் சிம்ரன் நடிக்கும் கேரக்டர் எது என் படக்குழுவினர்களிடம் விசாரித்த ஹிந்தியில் தபு நடித்த கேரக்டரில் தான் சிம்ரன் நடிக்கின்றார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. ஹிந்தியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்தப் படம் ஒரு திரில்லர் கதையம்சம் கொண்ட படம் என்றும் இந்த படத்தில் பிரசாந்த் மாற்றுத்திறனாளி இசைக்கலைஞராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் மற்றும் த்ரில் கதையம்சம் கொண்ட இந்தப் படம் இந்தியில் வெற்றி பெற்றது போல் தமிழிலும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.