தமிழ்நாடு
காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: திருநாவுக்கரசு மகனுக்கு சீட்
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த 25 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கு சற்றுமுன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்ற பெயர்கள் பின்வருமாறு:
இந்த வேட்பாளர் பட்டியலில் திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி.ராமசந்திரன் அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அதேபோல் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி மகன் கரு.மாணிக்கம் திருவாடானையில் போட்டியிடுகிறார். மேலும் மாணிக்கம் தாகூர் மாமனார் ரவிச்சந்திரன் மேலூரில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக காங்கிரஸ் கட்சியில் பணம் வாங்கிக் கொண்டு தான் சீட் கொடுக்கிறார்கள் என்று ஜோதிமணி எம்பி அவர்கள் குற்றம் சாட்டி இருந்தார் என்பதும் இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தனித்தனியாக ஒரு சில தலைவர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.