சினிமா செய்திகள்
.நலம் பெறுங்கள் தோழர். வேலை நிறைய இருக்கிறது: ஜனநாதன் குறித்து டுவிட் போட்ட இயக்குனர்!
இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்பி ஜனநாதன் தற்போது ’லாபம்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர மருத்துவ பிரிவில் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் விரைவில் குணமடைவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குநர் கரு பழனியப்பன் தனது டுவிட்டரில் நலம் பெறுங்கள் தோழர் வேலை நிறைய இருக்கிறது என்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் அவர் எஸ்பி ஜனநாதன் மற்றும் அமீருடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது:
தோழர் ஜனநாதனுக்கு மருத்துவ சிகிச்சை தொடர்ந்து நடைபெறுகிறது. மரு.ரமாநரசிம்மனுடன் நரம்பியல் நிபுணர்கள் மரு.சீனிவாசன் மற்றும் மரு.முருகன், தோழர்.ஜனாவின் மூளைப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் ரத்த உறைவை நீக்கும் முயற்சியை தொடங்கியிருக்கிறார்கள்.நலம் பெறுங்கள் தோழர். வேலை நிறைய இருக்கிறது.
தோழர் ஜனநாதனுக்கு மருத்துவ சிகிச்சை தொடர்ந்து நடைபெறுகிறது.
மரு.ரமாநரசிம்மனுடன் நரம்பியல் நிபுணர்கள் மரு.சீனிவாசன் மற்றும் மரு.முருகன், தோழர்.ஜனாவின் மூளைப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் ரத்த உறைவை நீக்கும் முயற்சியை தொடங்கியிருக்கிறார்கள்.நலம் பெறுங்கள் தோழர். வேலை நிறைய இருக்கிறது. pic.twitter.com/zcOPwsl8lM— கரு பழனியப்பன் (@karupalaniappan) March 12, 2021