தமிழ்நாடு
கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியானது. இதில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட இருக்கிறார் என்றும் மயிலாப்பூர் தொகுதியில் ஸ்ரீப்ரியா போட்டியிடவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மக்கள் நீதி போட்டியிட கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் சிங்காநல்லூரிலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் தாசப்பராஜ் என்பவரும் போட்டியிடுகின்றனர். மேலும் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சமீப்த்தில் இணைந்த பழகருப்பையா சென்னை தி நகரில் போட்டியிடுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் அதேபோல் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.