தமிழ்நாடு
காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் எவை எவை?
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த 25 தொகுதிகள் எவை எவை என்பதை இறுதி செய்யும் பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் இது குறித்து கலந்து பேசி தற்போது ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளனர். அந்த வகையில் தற்போது காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளில் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன. அந்த தொகுதிகள் எவை எவை என்பதை தற்போது பார்ப்போம்.
பொன்னேரி, திருபெரும்புதூர், ஊத்தங்கரை, ஓமலூர், உதகமண்டலம், கோவை தெற்கு, காரைக்குடி, மேலூர், சிவகாசி, திருவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருத்தாச்சலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, திருவில்லிப்புத்தூர், திருவாடானை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.