சினிமா
மீ டூ-வை பெண்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது: ரஜினிகாந்த் அறிவுரை!
மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளியே சொல்ல ஆரம்பித்துள்ளனர். இதில் பல முக்கிய பிரபலங்கள் சிக்க மீ டூ விவகாரம் பற்றி எரிகிறது. மத்திய அமைச்சர் ஒருவரே இந்த மீ டூ விவகாரத்தால் ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் இதில் பிரபல கவிஞர் வைரமுத்துவின் தலை உருண்டு வருகிறது. அவர் மீது பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்படுகிறது. இந்நிலையில் வைரமுத்து விவகாரம் குறித்து பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விவகாரம் குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
தான் நடித்து வரும் பேட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக நேற்று டுவிட்டரில் தெரிவித்த ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பியபோது விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசிய அவர் மீ டூ விவகாரம் குறித்தும் பேசினார்.
அப்போது, மீடூ விவகாரம் பெண்களுக்கு சாதகமான ஒன்று. அதை தவறாக பயன்படுத்தக்கூடாது. வைரமுத்து விவகாரத்தில், அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார் எனவும் சுட்டிக்காட்டினார்.