Connect with us

கிரிக்கெட்

“ரிஷப் பன்ட்ட சும்மா விடுங்க… தொந்தரவு செய்யாதீங்க!”- மீடியா மீது பொங்கும் ரோகித் சர்மா

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்திருக்கிறார் ரிஷப் பன்ட். அவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையிலங் ரிஷப் பன்ட் செய்த சாதனைகளை இன்னொருவரால் முறியடிக்கவே முடியாது என்று அடித்துச் சொல்லி புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றி வரலாற்றுச் சாதனைப் புரிந்த கையோடு, இங்கிலாந்துக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை வென்றது. இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் இந்தியா முன்னேறியுள்ளது. இந்த இரு தொடர்களையும் இந்தியா, வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பன்ட். இரு தொடர்களில் பன்ட் சதம் விளாசிய போட்டிகளில், அவர் அதிரடி பேட்டிங் காரணமாக இந்தியா வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரைக் கைப்பிற்றியுள்ள இந்திய அணி, அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்துக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை ஆரம்பிக்கிறது. இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் குஜராம் மாநிலத்தில் இருக்கும் அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தான் நடைபெறுகிறது. இதையடுத்து இந்திய அணியினர் தீவிரப் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

டி20 தொடரிலும் ரிஷப் பன்ட் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பன்ட் குறித்து அதிகம் கேள்விகள் எழுப்பப்பட்ட காரணத்தினால் உஷ்ணமான ரோகித், ‘இந்திய அணி நிர்வாகம், ரிஷப் பன்டை பெரிதாக தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுகிறது. அவர் போக்கில் கிரிக்கெட் விளையாடி வருகிறார். அதனால் சாதித்தும் வருகிறார். அவரை நாங்கள் கட்டுப்படுத்துவதில்லை. நீங்களும் அப்படிச் செய்யாமல் இருப்பீர்களா?’ என ஊடகங்களுக்குக் கேள்வி எழுப்பினார் ரோகித்.

Fans celebrating rishabh pant's comeback

மேலும் அவர், ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இங்கிலாந்துக்கு எதிராகவும் அவர் மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இனிமேல் அவருக்கு இறங்கு முகமே கிடையாது. ஊடகங்கள் அவர் மீது அழுத்தத்தைத் திணிக்காமல் இருக்கும் வரையில் பன்டுக்கு எந்தப் பிரச்சனையும் எழாது என நம்புகிறேன்.

நாளுக்கு நாள் பன்ட், கிரிக்கெட் குறித்து மேலும் புரிந்து கொண்டு தன் ஆட்டத்தை மேம்படுத்தி வருகிறார். அவர் அப்படிச் செய்வது அணிக்கு மிகவும் நல்லது’ எனப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியா3 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்3 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா4 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!