தமிழ்நாடு
கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது: 174 தொகுதிகளில் போட்டியிடும் திமுக!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
இதில் திமுக கூட்டணி தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை முழுமையாக முடித்து விட்டது என்பதும் இதனை அடுத்து திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகளின் விவரமும் அந்த கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை பின்வருமாறு:
திமுக: 174 தொகுதிகள்
காங்கிரஸ்: 25 தொகுதிகள்
விசிக: 6 தொகுதிகள்
மதிமுக: 6 தொகுதிகள்
இந்திய கம்யூனிஸ்: 6 தொகுதிகள்
மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்: 6 தொகுதிகள்
ஐ.யூ.எம்.எல்: 3 தொகுதிகள்
மமக: 2 தொகுதிகள்
த.வா.க: 1 தொகுதி
ம.வி.க: 1 தொகுதி
ஆ.த.பே: 1 தொகுதி
கொ.ம.தே.க: 1 தொகுதி
இதனையடுத்து எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை வரையரை செய்துவிட்டு பின் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு முக ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு கிளம்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.