Connect with us

தமிழ்நாடு

‘நாங்க பதிலடி கொடுத்தா தாங்க மாட்டீங்க..?’- தேமுதிகவுக்கு ஜெயக்குமாரின் நேரடி எச்சரிக்கை

Published

on

அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேமுதிக, அடுத்தக்கட்டமாக வேறு எந்தக் கட்சியுடனாவது கூட்டணி வைக்குமா, அல்லது தனித்துத் தேர்தலைச் சந்திக்குமா என்று தெரியவில்லை. கூட்டணி முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தேமுதிகவினர் அதிமுகவை கடுமையாக சாடி வருகின்றனர். இது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார், ‘அதிமுகவில் இருந்து தேமுதிக விலகியது அதிமுகவுக்கு பாதிப்பில்லை. பாதிப்புக்கு தேமுதிகவுக்கு தான். தேமுதிக எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானது. தேமுதிகவுடன் கூட்டணி தர்மத்தை கடைபிடித்தோம். நன்றி மறந்து தேமுதிகவினர் பேசக் கூடாது. தேமுதிகவுக்கு அங்கீகாரம் கிடைக்கக் செய்தது அதிமுக தான். வார்த்தைகளை அளந்து பேசுங்கள். ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டக் கூடாது. பிடிக்கவில்லை என்றால் நண்பர்கள் போல் கைகுலுக்கி செல்ல வேண்டும்.

தேமுதிகவினர் பேசுவதை விட என்னாலும் வெளுத்துகட்ட முடியும். கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில் மவுனமாக இருக்கிறோம். அரசியல் ரீதியான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளலாம். அரசியலுக்கு அப்பாற்பட்டு விமர்சனம் செய்யக் கூடாது. நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அதற்கு உரிய பதிலடியை அதிமுக கொடுக்கும். தேமுதிக எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும். தேமுதிகவின் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை வழங்குவதாக தெரிவித்து இருந்தோம். ஒவ்வொரு கட்சியின் பலத்துக்கு ஏற்ப அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து அதிமுகவை பிடிக்கவில்லை என்பதற்காக சேற்றை வாரி இறைப்பதா? கீழ்த்தரமான அரசியலை தேமுதிக முன்னெடுத்தால் அதிமுக பதிலடி கொடுக்கும் என்றும் எடப்பாடி மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார்.

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ப்ரோக்கோலி: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

ரூ. 2,40,000/- ஊதியத்தில் RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

410 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: நீதிமன்ற உத்தரவு

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

NTPC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

SIDBI வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.40,000/- சம்பளத்தில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா2 மணி நேரங்கள் ago

தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகிறது!

பர்சனல் ஃபினான்ஸ்2 மணி நேரங்கள் ago

புதிய மற்றும் பழைய வருமான வரி முறை: உங்களுக்கு எது சிறந்தது?

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

குரூப் 2, 2A தேர்வு விண்ணப்பத்திற்கு கடைசி தேதி நீட்டிப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 மணி நேரங்கள் ago

ஜூலை 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கான வார ராசி பலன்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

உலகம்3 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்5 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!