தமிழ்நாடு
கபடி விளையாடிய நடிகை ரோஜா: வைரல் வீடியோ!
பிரபல நடிகையும் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜா கபடி விளையாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது
ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் இரு குழுக்களிடையே கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தொடங்கி வைத்த நடிகை ரோஜா திடீரென ஆர்வக்கோளாறு காரணமாக களத்தில் இறங்கி கபடி விளையாடினார். ஒரு குழுவின் சார்பாக அவர் சில நிமிடங்கள் கபடி விளையாடினார் என்பதும், குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இதன் பின்னர் கபடி வீரர்களிடையே பேசிய நடிகை ரோஜா சிறுவயதில் மாணவப் பருவத்தில் தான் கபடி விளையாடுவேன் என்றும், கபடி விளையாடினால் மனதுக்கும் உடலுக்கும் உற்சாகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இன்றைய மன அழுத்தமான சூழ்நிலையில் அனைவரும் கபடி விளையாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நடிகை ரோஜா கபடி விளையாடியதை பார்த்து அங்கிருந்த மக்கள் கைதட்டி, விசிலடித்து அவருக்கு உற்சாக மூட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
நடிகை ரோஜா pic.twitter.com/s6GlSPSca7
— meenakshisundaram (@meenakshinews) March 9, 2021