வீடியோ
உங்க ஊர் தலைவன தேடி புடிங்க! சர்கார் டீஸர் ரிலீஸ்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் பட டீஸரை சன்பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள படம் சர்கார். இப்படத்தின் டீஸரை சன்பிக்சர்ஸ் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ளது.
சர்கார் கதையை சொல்லும் டீஸர்:
சி.இ.ஓ. சுந்தர் ராமசாமி கதாபாத்திரத்தில் கார்ப்பரேட் கிரிமினலாக இந்தியா வரும் விஜய், தனது ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டதை அறிந்து, தமிழக அரசியலில் தலையிடுகிறார். ராதரவி மற்றும் வரலட்சுமி சரத்குமார் அரசியல்வாதியாக நடித்துள்ளனர். வாக்குச் சாவடியில் பணிபுரியும் நபராக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு ஹவுஸிங் போர்ட் பகுதி வாசியாகவும் விஜய்க்கு உதவும் வலது கரமாக வருகிறார்.
கார்ப்பரேட் கிரிமினல் எப்படி மக்களுக்கு உதவு தலைவனாக மாறி தனது சர்காரை நடத்துகிறார் என்பதே டீஸரில் காட்டப்பட்டுள்ள கதைக்களமாகும்.