சினிமா செய்திகள்
இணையத்தில் வைரலாகும் ’குக் வித் கோமாளி’ தர்ஷாவின் ‘பேக் போஸ்’
விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள ’குக்’களும் சரி, கோமாளிகளும் சரி, அடிக்கும் லூட்டிகளுக்கும், நகைச்சுவைக்கும் அட்ராசிட்டிக்கும் அளவே இல்லை.
குறிப்பாக குக்’களில் பாபா பாஸ்கர், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி ஆகியோரும், கோமாளிகளில் புகழ், ஷிவாங்கி, பாலா, மணிமேகலை செய்யும் அட்ராசிட்டிகளும் இந்த நிகழ்ச்சியை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எலிமினேட் செய்யப்பட்ட தர்ஷா குப்தா, சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் இந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/DharshaaGupta/status/1368555345182814208
இந்த நிலையில் தற்போது அவர் ’என்னுடைய பேக் போஸ்’ என்று கூறி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க முதுகு தெரியும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/DharshaaGupta/status/1368855896189714433
மேலும் இன்று உலக மகளிர் தினத்தை அடுத்து தர்ஷா பதிவு செய்துள்ள ஒரு புகைப்படமும் அட்டகாசமாக உள்ளது என்பதும் அந்த புகைப்படத்தில் அவர் சேலையில் மிக அழகாக உள்ளார் என்றும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.