சினிமா
“அம்மன் தாயி“ படத்தின் டிரெய்லர்!
மகேஸ்வரன்-சந்திரஹாசன் இணைந்து இயக்கி வரும் படம் “அம்மன் தாயி“. இப்படத்தில் “பிக்பாஸ்“ ஜுலி ஹீரோயினாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் அன்பு, சரண் நடித்துள்ளனர்.
இப்படத்தை “கேசவ் புரொடக்ஷன்ஸ் – ஆர்.ஏ.தமிழன் புரொடக்ஷன்ஸ்“ என்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் அம்மன் தாயி. இப்படத்துக்குப் பிரேம்குமார் சிவபெருமான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில், இதன் சிங்கிள் டிராக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்போது படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.