கிரிக்கெட்
சென்னை வந்த தோனியை வரவேற்று ‘சிஎஸ்கே’ வெளியிட்ட மாஸ் வீடியோ!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி தாமதமாக நடந்த நிலையில் இந்த ஆண்டு வழக்கம்போல் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் விரைவில் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியாகும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சென்னை வந்து கொண்டிருக்கின்றனர். முதல் கட்டமாக நேற்று தல தோனி சென்னை வந்த நிலையில் இன்று அம்பத்தி ராயுடு வந்துள்ளார். இதனை அடுத்து மேலும் சில சிஎஸ்கே வீரர்கள் இன்று அல்லது நாளை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று சென்னை வந்த தோனியை சிஎஸ்கே நிர்வாகிகள் சிறப்புடன் வரவேற்றனர். இது குறித்த வீடியோவை ’விசில் போடு’ என்ற தலைப்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
The Singa Nadai to start off the day with! Thala Coming! #DenComing #WhistlePodu #Yellove ???????? @msdhoni pic.twitter.com/nu6XOmJ8qo
— Chennai Super Kings (@ChennaiIPL) March 4, 2021