சினிமா செய்திகள்
’கர்ணன்’ செகண்ட் சிங்கிள் பாடலின் டைட்டில் அறிவிப்பு!
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ’கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை மாலை 5.03 மணிக்கு இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
’கர்ணன்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகிய இதுகுறித்த தகவலில் நாளை வெளியாகும் பாடலின் டைட்டில் ’பண்டாரத்தி புராணம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே வெளியான கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் அதே பாணியில்தான் இந்த பாடலும் இருக்கும் என்பது இந்த டைட்டில் இருந்து தெரியவருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிய இந்த பாடல், ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் போலவே ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Get ready folks, #Karnan Paadal 2 #PandarathiPuranam from tomorrow 5:03 PM #YeaaluPandarathi @dhanushkraja @Music_Santhosh @mari_selvaraj @thinkmusicindia @KarnanTheMovie pic.twitter.com/OGHpOAszwu
— Kalaippuli S Thanu (@theVcreations) March 1, 2021