Connect with us

கிரிக்கெட்

INDvENG – 2 நாளில் முடிந்த 3வது டெஸ்ட்; குஜராத் பிட்ச்-ஐ கேவலப்படுத்திய யுவ்ராஜ் சிங், இங்கி., ஆஸி., வீரர்கள்!

Published

on

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் முடிவுக்கு வந்துள்ளது பல கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் குஜராத்தின் நரேந்திர மோடி மைதானம் மீது அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

3வது போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, 145 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து இரண்டாவது நாளில் விளையாடிய இங்கிலாந்து அணி, 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் 49 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 2 – 1 என்று முன்னிலைப் பெற்றுள்ளது. அடுத்தப் போட்டியும் நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்தும் நரேந்திர மோடி பிட்ச் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ‘இரண்டு நாட்களில் டெஸ்ட் முடிந்தது நல்லதுதானா என்று எனக்குத் தெரியவில்லை. இதைப் போன்ற விக்கெட்டுகளில் அனில் கும்ப்ளேவும் ஹர்பஜன் சிங்கும் பந்து வீசியிருந்தால் அவர்கள் 1000 மற்றும் 800 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருப்பர்’ என்று தெரிவித்துள்ளார்.

அவரைப் போலவே இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வாகன், ‘இந்தப் போட்டி மிகுந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்தவையாக இருந்தது. ஆனால் இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற விக்கெட் கிடையாது’ என்று சாடியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாக், ‘அடுத்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாடி இருந்தால், அணிகள் அடிக்கும் ரன்கள் இன்னும் குறைவாக இருக்கும். ஜோ ரூட்டுக்கு 5 விக்கெட்டுகள் கிடைக்கும் போது, இந்த பிட்ச்சின் தராதரம் தெரிகிறது’ என்று விமர்சித்துள்ளார்.

இப்படி பலரது விமர்சனக்குத்துக்கும் உள்ளான குஜராத் பிட்ச், அடுத்தப் போட்டிக்கு மாற்றப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 

 

 

author avatar
seithichurul
ஆன்மீகம்1 மணி நேரம் ago

குரு மற்றும் செவ்வாய் இணைப்பு: பணப்பற்றில் வெற்றி பெறும் ராசிகள் – உங்களுக்கான சிறந்த வாய்ப்புகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

புதன் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் மாதத்தில் வெற்றி பெறும் ராசிகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ராகு-கேது பெயர்ச்சி: வருங்காலத்தில் பணமூட்டையில் பெரும் வெற்றியடையப்போகும் ராசிகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மூளை சுறுசுறுப்பை அதிகரிக்க உதவு ம் சிறந்த உணவுகள் – முழு விபரம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பகவான் வக்ர நிவர்த்தி: நேரடியாக உதவக்கூடிய ராசிகள்!

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்! அடுத்த 6 மாதங்களில் செய்ய வேண்டியது என்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

ராகு – கேது பெயர்ச்சியில் துன்பத்தை விரட்டும் ராசிகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி: ரிஷபம், கும்பம், மேஷம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிம்மத்தில் புதன் பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம்! உங்களுக்கு எப்படி?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி: மேஷம், சிம்மம், தனுசு ராசிகளுக்கு பொற்காலம்!

வணிகம்6 நாட்கள் ago

YouTube Premium கட்டணம் உயர்வு: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

வணிகம்6 நாட்கள் ago

இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலையில் மாற்றமில்லை!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(28-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (29/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

ஸ்டாலின் அமெரிக்க பயணம்: தமிழகத்திற்கு இதுவரை கிடைத்துள்ள முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும்!

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

பிரபல நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

இந்தியா6 நாட்கள் ago

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க அறிய வாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

லால் சலாம் ஓடிடிக்கு வருது!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ. 42,820 ஊதியத்தில் UCIL புதிய வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

உண்மையான முட்டை vs. போலியான முட்டை: கண்டுபிடிப்பது எப்படி?