தமிழ்நாடு
விஜயகாந்த், பிரேமலதா, விஜயபிரபாகரன் போட்டியிடும் தொகுதிகள்!
வரும் தேர்தலில் விஜயகாந்த் குடும்பத்தை சேர்ந்த மூவர் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது
2020 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக கட்சி இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இப்பொழுது வரை தேமுதிகவை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திமுக கூட்டணியிலும் தேமுதிக மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தேமுதிகவில் விருப்பமனு பெறப்பட்டது என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதாவும் அம்பத்தூரில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடவும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். விஜயகாந்த் குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர் மட்டுமே இருக்கும் நிலையில் அவர்களில் மூவர் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் போட்டியிடும் தொகுதியும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது