Connect with us

கிரிக்கெட்

100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் கடைசி இந்திய வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் சர்மா இருக்கலாம்? ஏன்?

Published

on

Ishant Shamra might be the last indian fast bowler who played 100 test matches

இந்திய வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா நாளை தன்னுடைய வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் விளையாட இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இஷாந்த் சர்மா தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்.

இந்த மைல்கல்லை எட்டும் இரண்டாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. கடைசியாக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 1978 முதல் 1994 க்கு இடைப்பட்ட காலத்தில் கபில் தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

உலகம் முழுவதிலும் தற்போது அதிகரித்து வரும் டி20 யுகத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 100 போட்டிகளை கடந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டுவர்ட் போர்டு உள்ளிட்ட மிகச்சிலரே. அந்த பட்டியலில் இப்போது இஷாந்த் சர்மாவும் இணைய உள்ளார். இதில் இருக்கும் மற்றொரு முக்கியமான தகவல் என்னவென்றால், இஷாந்த் சர்மா தான் டெஸ்ட் போட்டிகளில் 100 போட்டிகள் விளையாடிய கடைசி இந்திய வேகப்பந்து வீச்சாளராக இருக்கவும் வாய்ப்புள்ளது.

ஏனெனில் மாறிவரும் நவீன கிரிக்கெட் காலத்தில் வீரர்களுக்கு வைக்கப்படும் சோதனை முறைகளும் அவர்கள் டி20 போட்டிகளுக்காக தங்களை தயார் படுத்திக்கொள்வதும் டெஸ்ட் போட்டிகளில் அவர்களை நீண்ட காலத்திற்கு விளையாட செய்வதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: INDvENG – “அவங்க நம்மள பற்றி நினைக்கிறாங்களா?”- 3வது டெஸ்டுக்கு முன்னர் சீறிய ரோகித்; என்ன காரணம்??

32 வயதாகும் இஷாந்த் சர்மா கடைசியாக 2016-ல் சர்வதேச ஒருநாள் மற்றும் 2013 -ல் டி20 போட்டிகளில் விளையாடினார். அதன் பின்னர் உள்நாட்டு தொடர்கள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவர் குறைந்த ஓவர் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

மற்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் இஷாந்த் சர்மா ஒரே ஒரு ஒரே வடிவ கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடுவது பாதுகாப்பானதும் கூட. அவருடைய 8 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 2 முறை மட்டுமே இஷாந்த் சர்மா ஒரு வருடத்தில் 10க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதனால் இனிவரும் காலங்களில் அவர் இன்னும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

முகமது ஷமி

மற்றொரு இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, ஏற்கனவே 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவருக்கு 100 டெஸ்ட் போட்டிகள் என்கிற மைல்கல்லை எட்டுவதற்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் அடிக்கடி ஏற்படும் காயம் காரணமாக ஷமிக்கு தொடர்ந்து ஓய்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் இடம் பெறுவதால் அதற்காகவும் சில நேரங்களில் ஷமிக்கு டெஸ்ட் போட்டிகளில் ஒய்வு வழங்கப்படுகிறது.

Ishant Shamra might be the last indian fast bowler who played 100 test matches

பும்ரா

இந்தியாவின் தற்போதைய நட்சத்திர பவுலராக இருக்கும் பும்ரா இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் இந்திய அணி நிர்வாகம் டெஸ்ட் போட்டிகளில் எக்ஸ் ஃபேக்ட்ராக இருக்கும் வீரர்களை குறிவைப்பதால் பும்ரா 100 டெஸ்ட் போட்டிகள் என்கிற அளவிற்கு நீண்ட காலம் ஆடுவதும் சந்தேகமே.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் இந்திய விக்கெட் கீப்பரும் இஷாந்த் சர்மாவுடன் டெல்லி அணியிஆடிய வீரருமான விஜய் தஹியா, 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கடைசி இந்திய வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் சர்மா இருப்பார். இப்போது 100 டெஸ்ட் போட்டிகளில் யாரும் விளையாடுவதை நான் காணவில்லை. பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்கள் ஐபிஎல் மற்றும் வெள்ளை பந்து விளையாட்டுகளுக்கு ஏற்ப தங்களை பாதுகாத்துக் கொள்வதால், 100 டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் விளையாடுவது கடினமாக இருக்கும் என்றார்.

அவர் ஒரு விக்கெட் எடுத்து கொடுக்கும் பவுலர் கிடையாது, ஆனால் பல போட்டிகளில் எக்ஸ் ஃபேக்டராக இருந்திருக்கிறார். ஸ்பின் பவுலர்களுக்கு இணையாக ஒரு நாள் முழுவதும் 20க்கும் மேற்பட்ட பவுலர்கள் அவரால் நிலையாக இப்போதும் வீச முடியும் என்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இஷாந்த் சர்மா ஆரம்ப காலத்தைய விட கடந்த சில வருடங்களாக தான் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். உதாரணமாக முதல் 79 போட்டிகளில் அவர் 226 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஆனால் கடைசி 20 போட்டிகளில் மட்டும் 70க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமியின் கூட்டணியில் தான் இந்தியா வெற்றிகரமான டெஸ்ட் அணியாகவும் வளம் வந்துகொண்டு இருக்கிறது.

தோனியின் கேப்டன்சியில் தற்காப்புக்கான பவுலராக இருந்து கோலியின் கேப்டன்சியில் தாக்குதல் கொடுக்கும்பவுளராக மாறியிருக்கிறார் இஷாந்த் ஷர்மா. அவருடைய இதே பார்ம் நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் கபில் தேவின் அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் என்கிற சாதனையும் முறியடிக்க வாய்ப்புள்ளது.

ஜோதிடம்2 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்13 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்24 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்37 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்49 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்58 நிமிடங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!