சினிமா செய்திகள்
விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகாவுக்கு கைவிரல் முறிந்ததால் பரபரப்பு!
அஜித் நடித்த ’உன்னை தேடி’ ’ஆனந்த பூங்காற்றே’ முரளி நடித்த ’வெற்றிக்கொடிகட்டு’ ஜீவன் நடித்த ’திருட்டுப்பயலே’ ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா. இவர் சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டதாகவும் இதனால் கைவிரல் முறிந்ததாகவும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகை மாளவிகா சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கிக் கொண்டதாகவும் இதனால் தனது கைவிரல் முறிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என்றும் அவர் குறிப்பிட்டு தனது புகைப்படத்தையும் அதில் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவரது முகத்திலும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை மாளவிகா கடந்த 2007ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் மாளவிகாவின் இன்ஸ்டா பக்கத்திற்கு ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.