சினிமா செய்திகள்
கீர்த்தி சுரேஷ்- அனிருத் காதல் செய்தி… விளக்கம் கொடுத்துள்ள தந்தை..!
கீர்த்தி சுரேஷ்- அனிருத் காதல் செய்தி நிற்காமல் தொடர்ந்து உலாவிக் கொண்டே இருக்கின்றன.
நடிகை கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் அனிருத்-ஐ காதலித்து வருகிறார் என்ற செய்தி சில நாட்களாக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் இசை அமைப்பாளர் அனிருத் நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளை பார்ட்டி உடன் கொண்டாடினார்.
அந்த பார்ட்டியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வரிசையில் நடிகை கீர்த்தி சுரேஷும் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டார். அப்போது இருவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். அந்தப் புகைப்படம் பல நாட்களுக்குப் பின்னரே சமுக வலைதளங்களில் வைரல் ஆனது.
அதில் கீர்த்தியும் அனிரூத்-ம் ஒருவர் தோள் மீது ஒருவர் கைகளைப் போட்டுக் கொண்டு போஸ் கொடுத்திருப்பார்கள். இந்தப் புகைப்படம் தான் தற்போது அனிருத்- கீர்த்தியை காதலர்கள் ஆக்கியுள்ளது. கீர்த்தி காதலிக்கிறாரா என்பது குறித்து அவரது தந்தை சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி கீர்த்தியும் அனிருத்-ம் நண்பர்களாக மட்டுமே பழகி வருகிறார்களாம். கீர்த்தியைக் குறித்து இதுவரையில் மூன்று முறைக்கு மேலாக வதந்திகள் பரவிவிட்டதாம்.