சினிமா செய்திகள்
அனிருத்-கீர்த்தி சுரேஷ் காதல் உண்மையா?
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அனிருத்துடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்து இருந்தார். இதனை அடுத்து அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் காதலித்து வருவதாகவும் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும், வதந்திகள் மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவியது
அது மட்டுமின்றி அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் தங்களது உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து இரு தரப்பிலும் இருந்து தற்போது விளக்கம் அளித்துள்ளனர்
நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் எங்களை பற்றி வந்து கொண்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் வதந்திகள் என்றும் அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இருவருமே தங்களுடைய துறைகளில் பிசியாக இருப்பதால் இப்போதைக்கு திருமணம் குறித்த எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளனர். ஆனால் காதலிக்கும் நட்சத்திர ஜோடிகள் அனைவருமே முதலில் வதந்தி என்று கூறிவிட்டு அதன்பின்னர் சில மாதங்கள் கழித்து திருமணம் செய்து கொள்வதாகவும், அதேபோல் அனிருத்-கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த செய்தியும் விரைவில் வரும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’, செல்வராகவன் நடித்து வரும் ’சாணி காகிதம்’, மற்றும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கவுள்ள ’தளபதி 65’ படத்திற்கும், ஷங்கரின் அடுத்த படத்திலும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.