சினிமா செய்திகள்
தியேட்டர் ரிலீஸ் தேதி உடன் வெளியான தனுஷ்-ன் ‘கர்ணன்’ ஃபர்ஸ்ட் லுக்..!
நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி உள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இரண்டாவது திரைப்படம் கர்ணன். இயக்குநர் மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள் படத்துக்குப் பின்னர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கர்ணன் படம் தற்போது தயாராகி உள்ளது. இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ரஜீஷா என்னும் மலையாள நடிகை நாயகி ஆக நடித்துள்ளார்.
கர்ணன் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் 9-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#Karnan first look and “THEATRICAL RELEASE”date !! pic.twitter.com/N5gx88XgWr
— Dhanush (@dhanushkraja) February 14, 2021
சமீபத்தில் இந்தப் படத்துக்கு இசை அமைத்த சந்தோஷ் நாராயணன் கர்ணன் படத்தை வெகுவாகப் பாராட்டி உள்ளார். சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்ணன் பார்த்தேன். மிரண்டுவிட்டேன். தனுஷ், மாரி செல்வராஜ் மற்றும் அருமையான குழுவினர் எனப் பார்க்கையில் பெருமையாக உள்ளது. கர்ணந் அனைத்தும் கொடுப்பான்” எனக் குறிப்பிட்டிருந்தார்.