சினிமா செய்திகள்
‘பிக்பாஸ்’ ஜித்தன் ரமேஷ்-க்குள் இப்படி ஒரு திறமையா?- வைரல் வீடியோ
![within Ramesh - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/within-Ramesh.jpg)
பிக்பாஸ் புகழ் ஜித்தன் ரமேஷ்-க்குள் இப்படி ஒரு திறமை ஒளிந்திருக்கிறதா என ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு அவரது வீடியோ ஒன்று வைரல் ஆகியுள்ளது.
சினிமாவில் நடிகராகப் பெரிதும் ஜொலிக்காத நடிகர் ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் தனது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது சினிமா தயாரிப்பாளர் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது தயாரிப்பில் வெளியான நடிகர் தளபதி விஜய்-ன் ஜில்லா திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றது.
இந்தப் படத்தில் தளபதி விஜய், ஜித்தன் ரமேஷ் அவரது தம்பியும் சகோதரருமான ஜீவா ஆகிய மூவரும் சேர்ந்து ஒரு பாடலின் முடிவில் சிறிய நடன அரங்கேற்றத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள். அதன் பின்னர் தற்போது ஜித்தன் ரமேஷ் சூப்பர் நடனம் ஒன்றை ஆடியுள்ளார். இந்த டான்ஸ் வீடியோ தான் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram