Connect with us

தினபலன்

உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (13/02/2021)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

13-Feb-21

சனிக்கிழமை

 

மேஷம்:

இன்று தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில்  கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

 

ரிஷபம்:

இன்று வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறை பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

 

மிதுனம்:

இன்று நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவு உண்டாகும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் வேலையையும் தானே செய்யும் நிலை உருவாகும். எனினும் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

 

கடகம்:

இன்று வரவேண்டிய பணம் இழுபறியாக இருந்தாலும் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

 

சிம்மம்:

இன்று பிள்ளைகளின் -கல்விக்கான செலவு கூடும். இல்லறத்தில்  இருந்த சச்சரவு தீரும். பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும். ஆனாலும் சுபச்செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

 

கன்னி:

இன்று கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடு வரலாம். தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1, 7

 

துலாம்:

இன்று சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். அதேநேரத்தில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 5

 

விருச்சிகம்:

இன்று அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது.  பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

 

தனுசு:

இன்று கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

 

மகரம்:

இன்று சந்தோஷமான செய்தி வந்து சேரும். மாணவர்கள் பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனநிம்மதி கிடைக்கும். சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

 

கும்பம்:

இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

 

மீனம்:

இன்று தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை  அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

author avatar
seithichurul
வணிகம்8 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா10 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்10 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா10 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!