சினிமா செய்திகள்
ரம்யா பாண்டியனுக்கு கட்-அவுட், பாலாபிஷேகம் எனக் கொண்டாடிய ரசிகர்கள்..!- வைரல் போட்டோஸ்
நடிகை ரம்யா பாண்டியனுக்கு அவரது ரசிகர்கள் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்த புகைப்படங்கள் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஜோக்கர் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன் விஜய் டிவி-யின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டார். பிக்பாஸ் வீட்டில் 106 நாட்களை நிறைவு செய்து வீடு திரும்பிய அடுத்த நாளே கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையிலான கதையில் நடிகர் சூர்யாவின் 2டி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கமிட் ஆனார் ரம்யா பாண்டியன்.
இவருக்கு பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் போது ஒரு பெரும் கூட்டமே ரசிகர்கள் படை என விஜய் டிவி நிகழ்ச்சியை அதிர வைத்தனர். அதே கூட்டம் தற்போது ரம்யா பாண்டியனுக்காக பெரிய கட் அவுட் வைத்து அந்த கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளது. ரசிகர்கள் வெறித்தனத்தை ட்விட்டர்வாசிகள் பலரும் எதிர்மறையாக விமர்சனங்கள் செய்து வந்தாலும் ரசிகர்கள் நிறுத்தாமல் சமுக வலைதளங்களில் கட் அவுட் புகைப்படங்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Its extremely important to have a loyal fan base, #RamyaPandian Have that????#RamyaPandiyan #Ramya #BBB21 #BiggBoss4Tamil #BiggBossKondattam pic.twitter.com/of94cJ4QJM
— Ramya Pandianᶠᶜ (@imRamyaPandiyan) February 8, 2021