வேலைவாய்ப்பு
தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய மருத்துவ கவுன்சிலின் (ICMR) கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIMR) காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ICMR NIMR
மொத்த காலியிடங்கள்: 08
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை: Project Consultant, Project Assistant, Project Technician Grade 1, Grade 2, Grade 3, Data Entry Operator
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, Graduate,Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25 முதல் 70 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.16,000 முதல் ரூ.50,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://main.icmr.nic.in/career-opportunity என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/advertisement09022021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.02.2021.