சினிமா செய்திகள்
‘முஸ்டாச்சே… வேஸ்டாச்சே…’ சந்தோஷ் நாராயணனின் கானா- பாரிஸ் ஜெயராஜ் வீடியோ பாடல்!
நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் ‘முஸ்டாச்சே… வேஸ்டாச்சே…’ கானா பாடலின் வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே வைரல் ஆகியுள்ளது.
நடிகர் சந்தானத்துக்கு A1 என்ற வெற்றிப் படத்தை அளித்த இயக்குநர் ஜான்சன் தான் தற்போது பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். மிகவும் மூத்த ஒளிப்பதிவாளர் ஆன ஆர்தர் விலசன் பாரிஸ் ஜெயராஜ் படத்துக்கு ஒளிப்பதிவாளர் ஆகப் பணியாற்றி உள்ளார். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
கானா நாயகனாகவே நடிகர் சந்தானம் பாரிஸ் ஜெயராஜ் ஆக நடித்துள்ளதால் முழுக்க முழுக்க கானா இசையில் புகுந்து விளையாடி உள்ளார் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இந்தப் படத்தில் நாயகிகள் ஆக அனைகா சோதி மற்றும் சஸ்திகா ராஜேந்திரன் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர் மொட்டை ராஜேந்திரனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் ‘முஸ்டாச்சே… வேஸ்டாச்சே…’ என்னும் பாடல் வீடியோ இன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது. சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் காதலர் தினத்தை ஒட்டி வருகிற பிப்ரவரி 12-ம் தேதி திரை அரங்கங்களில் வெளியாக உள்ளது.