சினிமா செய்திகள்
5 வயதில் இருந்தே ஆஸ்துமா… மனம் திறந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காஜல் அகர்வால்..!
![kajal Agarwal - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/image-15.jpg)
ஐந்து வயதில் இருந்தே ஆஸ்துமா பிரச்னையால் அவதிப்பட்டு வருவதாக நடிகை காஜல் அகர்வால் முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஸ்துமா மற்றும் இன்ஹேலர் பயன்படுத்துதல் குறித்தான விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். அதில் காஜல் கூறுகையில், “எனக்கு ஐந்து வயதிலேயே ஆஸ்துமா பிரச்னை இருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். சின்ன குழந்தையாக இருக்கும் போது சாக்லேட், ஐஸ் என எதுவுமே சாப்பிட முடியாது. நமது நாட்டின் சூழலுக்கு எங்கு சென்றாலும் மாசு. அதனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவேன்.
அடுத்து எனது பணியின் காரணமாகத் தொடர்ந்து பயணம், மாறுபட்ட வானிலை என கஷ்டப்படும் போது எனக்கு மிகப் பெரிய உதவியாக இருந்தது இன்ஹேலர். இன்ஹேலரை பொது இடத்தில் பயன்படுத்தப் பலரும் தயங்குகிறார்கள். எந்த இடம் என்றாலும் நமக்காக இன்ஹேலர் பயன்படுத்துவதை தயக்கம் இன்றி தொடருங்கள்.
நான் என்னுடைய இன்ஹேலரை எப்போதுமே என்னுடனே வைத்திருப்பேன். இன்றைய சூழலில் பலருக்கும் இன்ஹேலர் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், கூச்சப்படுகின்றனர். கூச்சப்படாமல் இன்ஹேலர் பயன்படுத்த முன் வாருங்கள்” எனக் குறிப்பிட்டு நடிகர்கள் சிரஞ்சீவி, ஜான் ஆபிரஹாம், உன்னி முகுந்தன் ஆகியோரையும் விழிப்புணர்வு ஏற்படுத்த அழைப்பு விடுத்துள்ளார் காஜல் அகர்வால்.
View this post on Instagram