சினிமா செய்திகள்
நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே பதிவு செய்த புகைப்படம்!
பிரபல நடிகை பூஜா ஹெக்டேவிடம் நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகருக்கு அவர் பதிவு செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே. அதன்பின் இவர் பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த நிலையில் மீண்டும் தமிழில் தளபதி விஜய் ஜோடியாக அவரது 65வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பூஜா ஹெக்டே ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 12 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது ஒவ்வொரு பதிவும் லட்சக்கணக்கில் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பூஜா ஹெக்டே ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த போது ஒரு குறும்புக்கார ரசிகர், ‘உங்களுடைய நிர்வாண புகைப்படத்தை பதிவு செய்யுங்கள்’ என்று கேட்டிருந்தார். அதற்கு பூஜா ஹெக்டே வெறும் காலுடன் உள்ள புகைப்படத்தை பதிவு செய்து ’இதுதான் நீங்கள் கேட்டது’ என்று அவர் குறும்பாக பதிவுசெய்துள்ளார். பூஜா ஹெக்டேவின் இந்த பதிவும் புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது