Connect with us

உலகம்

என்னது விளையாட ஆள் இல்லையா? இப்போ நிலைமையே வேற பாஸ்.. இந்திய அணிக்கு காத்திருக்கும் புதிய சவால்!

Published

on

சென்னை: இந்திய அணியில் காயத்தினால் அடுத்தடுத்து வீரர்களை இழந்து ஆஸ்திரேலிய தொடரில் யாரை களமிறக்குவது என தடுமாறிய நிலையில் இப்போது இருக்கக்கூடிய அதிகப்படியான வீரர்களில் யாரை விளையாடக்கூடிய பிளேயிங் லெவனில் களமிறக்குவது என்கிற புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது.இந்தியாவில் நீண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட வரும் இங்கிலாந்து அணி முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தியாவில் அதுவும் சென்னையில் நடைபெறும் சர்வதேச போட்டி என்பதால் ரசிகர்களும் இந்த தொடரை காண ஆர்வத்தோடு உள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா, ஷுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விருத்திமான் சஹா, ஹர்திக் பாண்டியா, ரிஷிப் பண்ட், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், கேஎல் ராகுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சென்னை மைதானம் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதால் இந்திய அணி அதிகபட்சமாக 3 ஸ்பின் பவுலர்களுடனும் (அதில் ஒருவர் ஆல்ரவுண்டராக இருப்பர்) 2 வேகப்பந்து வீச்சாளர்களுடனும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பும்ரா, ஷர்துல் தாகூர், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களில் விளையாடும் பிளேயிங் லெவனில் கண்டிப்பாக பும்ரா இடம்பிடிப்பார். காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி தொடரில் பங்கேற்காமல் போன பும்ரா இப்போது மீண்டு வந்து முழு உடல் தகுதியோடு இருக்கிறார். இதனால் பும்ரா வழி நடத்தி செல்ல கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டணியில் இடம் பிடிக்க போகும் மற்றொரு வீரர் யார் என்பது தான் கேள்வியே?

ஷர்துல் தாகூரை பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய தொடரிலேயே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அவரை தவிர்த்து இஷாந்த் சர்மா அல்லது முகமது சிராஜ் இருவருக்கும் இடையே தீவிர போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டியில் மட்டும் சிராஜ் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். அதிலும் முக்கியமான பிரிஸ்பேன் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முழு பார்மில் இருக்கிறார். அதேநேரம் மூத்த அனுபவ வீரரான இஷாந்த் சர்மா காயத்தில் இருந்து இப்போது தான் மீண்டு வந்து இருக்கிறார். மூத்த வீரர் என்கிற அடிப்படையில் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புள்ளது. ஆனால் கடந்த ஒருவருடமாக சர்வதேச போட்டிகளில் எதிலும் பங்கேற்காமல் இருக்கும் இஷாந்த் சர்மாவின் பார்ம் குறித்த குழப்பம் நிலவுவதால் இருவரில் ஒருவரை தேர்வு செய்வதில் கோச் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி, பவுலிங் கோச் பாரத் அருண் ஆகியோருக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

அடுத்து ஸ்பின் பவுலிங் கூட்டணியில் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் இடப்பெற அதிக வாய்ப்பு உள்ளது. இவர்களை தவிர்த்து ஜடேஜாவின் இடத்தை நிரப்ப போவது வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் இடையே போட்டி நிலவுகிறது. கடந்த தொடரில் வாஷிங்டன் சுந்தர் பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் அசத்தியிருந்தார். முக்கியமான கட்டங்களில் பேட்டிங்கிலும் அணிக்கு பக்க பலமாக இருந்திருக்கிறார். ஜடேஜாவின் இடத்தை நிரப்ப சரியான ஆளாக இவரை களமிறக்க யோசித்தாலும், மறுபக்கம் இருக்கும் அக்சர் பட்டேலும் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்து இருக்கிறார். இதனால் இவர்களில் ஒருவரை தேர்வு செய்வதும் கடினமான காரியம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதன் இறுதி போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் மிக கவனமாக விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அணியை தேர்வு செய்வதிலும் மிகுந்த கவனத்துடன் செயல்பட உள்ளனர்.

வணிகம்8 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா18 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்19 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா19 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்19 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!