சினிமா செய்திகள்
இயக்குநர் ஹரி படத்தில் இணைந்த ‘குக்கு வித் கோமாளி’ பிரபலம்..!
![director hari - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/director-hari.jpg)
இயக்குநர் ஹரி இயக்கும் புதிய படம் ஒன்றில் குக்கு வித் கோமாளி பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார்.
இயக்குநர் ஹரி தற்போது தனது மச்சானும் நடிகருமான அருண் விஜய் உடன் ஒரு படத்தில் பணியாற்றி வருகிறார். இன்னும் பெயர் அறிவிக்கப்படாத அந்தப் படத்தில் நாயகன் அருண் விஜய்-க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இந்த ஜோடி ஏற்கெனவே மாஃபியா திரைப்படத்தில் இணைந்து நடித்து இருந்தனர்.
இந்தப் படம் முழுக்க முழுக்க கிராமத்துக் கதை ஒன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறதாம். அருண் விஜய், பிரியா பவானி சங்கர் உடன் பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், கேஜிஎஃப் ராமச்சந்திர ராஜு, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் இன்று ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பல ரசிகர்களைப் பெற்ற புகழ் இணைந்துள்ளார்.
Cooku with comali fame #Pugazh part of ours #AV33 & #Hari16 #DirectorHARI@DrumsticksProd @arunvijayno1 @priya_Bshankar @iYogibabu @prakashraaj @realradikaa @GarudaRaam @0014arun @ertviji @clusters_media @johnsoncinepro @CtcMediaboy pic.twitter.com/T4G6HXRICk
— Drumsticks Productions (@DrumsticksProd) February 2, 2021