தமிழ்நாடு
“ஸ்டாலின் தாங்க அடுத்த முதல்வர்..!”- பிரச்சாரத்தில் ‘ஒப்புக்கொண்ட’ எடப்பாடி பழனிசாமி – வைரல் வீடியோ!!!
![edappadi palanisamy - Bhoomitoday edappadi palanisamy](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/2-5.jpg)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்று பேசியுள்ளார். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் இன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்டுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் தான் எப்போதும் கடும் போட்டி நிலவும். இந்த முறை தேர்தலின் போதும், இந்த இரண்டு கட்சிகளும் தான் மல்லுக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேடசந்தூர் MLA-என்ன முதலமைச்சர் பழனிச்சாமியே எங்க தலைவர் தளபதியார்தான் அடுத்த முதல்வர்னு ஒப்புக்கொண்டு வெள்ளைக்கொடி ஏந்திய அற்புத காட்சி இதோ????@anbilRaja @Anbil_Mahesh @Udhaystalin @TRBRajaa #Trembling_AIADMK pic.twitter.com/OFCipfQEpZ
— SenthilPeriasamy (@IPSenthil) January 25, 2021
எடப்பாடி தலைமையிலான அதிமுகவும், ஸ்டாலின் தலைமையிலான திமுகவும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி, கொங்கு மண்டலத்தில், வேன் மீது ஏறி பொது மக்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கையில், ‘எனவே இன்றைக்கு ஆட்சிக்கு வருகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்டாலின் அவர்கள்…’ என உளறிக் கொட்டியுள்ளார். அவர் என்ன சொல்கிறார் என்று தெரியாமல், ‘ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்’ என்று சொல்லாமல் சொல்லி விட்டார். இதை மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றாலும், வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.