டிவி
ரம்யா பாண்டியனை தூக்கியிருக்கும் ரியோ… வேற லெவல் கட் அவுட் அடித்து வரவேற்ற ‘பழனிசாமி பாய்ஸ்’..!
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் நடிகர் ரியோ ராஜை அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் வேற லெவலில் கட் அவுட் அடித்து உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்துள்ளார் நடிகர் ரியோ ராஜ். இவர் முழுவதுமாக 106 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து விட்டு இரண்டாவது ரன்னர் அப் என்ற முறையில் நிகழ்ச்சியை நிறைவு செய்தார். ரியோ வீட்டுக்குத் திரும்பும் போது அவரது நண்பர்கள் குழு ரியோவுக்கு கட் அவுட் வைத்து வரவேற்றுள்ளனர்.
’டேக் இட் டேக் இட் அள்ளி வழங்கிய கொடை வள்ளலே…’, ‘கும்மு கும்மு என்று குத்திய போதும் கம்மென்று இருத காந்தியடிகளே’, ’அடிபட்ட கண்டெஸ்ட்டண்ட்-களுக்கு ஆறுதலாய் இருந்த அம்ருதாஞ்சனே’, ‘உயிரைக் கையில் பிடித்துகொண்டு உலாவிய உயிர்மூச்சே’, ‘ஆரிக்கே அட்வைஸ் கொடுத்த அதிசயமே, அற்புதமே, அறிவுக் களஞ்சியமே’ எனப் புகழ்ந்து தள்ளி கட் அவுட் வைத்து வரவேற்று ரியோ-வை வெட்கப்பட வைத்துள்ளனர்.
View this post on Instagram