தமிழ்நாடு
தினகரன் அணியில் இருக்கும் 7 ஸ்லீப்பர் செல்கள்.. ஓ.பி.எஸ் பரபரப்பு
சென்னை: டிடிவி தினகரன் அணியில் அவருக்கு எதிராகவே பலர் இருக்கிறார்கள் அவர்கள் என்னிடம் பேசி வருகிறார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் புகார்களுக்கு பதில் அளிக்கும் வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
தினகரன் அணியில் அவருக்கு எதிராகவே பலர் இருக்கிறார்கள். அவருக்கு அருகில் 18 பேர் இல்லை. அவருக்கு எதிராக 7 பேர் அவர் அணியில் இருக்கிறார்கள்.
அவரை பேசுவது சரியில்லை என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். அவர்கள் எல்லோரும் சீக்கிரம் வெளியே வருவார்கள் என்றார்.