Connect with us

கிரிக்கெட்

டாப் கியரில் செல்லும் கேன் வில்லியம்சன்.. கோலியின் சாதனைக்கு பாதகம் வருமா? விரிவான விளக்கம் இதோ!

Published

on

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 24வது சதமும் மற்றும் நான்காவது இரட்டை சதமும் அடித்து அசத்தியுள்ளார். 2021 ஆம் ஆண்டின் முதல் சதம் கேன் வில்லியம்சன் அடித்தது தான். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவருடைய ஆட்டம் மிக சிறப்பாக அமைந்திருந்தது. இதன் மூலம் விராட் கோலியின் அதிகபட்ச சதம் அடித்த சாதனையை கேன் வில்லியம்சன் நெருங்கி கொண்டிருக்கிறார். அதே போல ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களாக பார்க்கப்படும் டேவிட் வார்னர் மற்றும் சடீவ் ஸ்மித்தின் எண்ணிக்கையையும் முறியடிக்க காத்துக்கொண்டிருக்கிறார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 27 டெஸ்ட் சதங்கள் அடித்திருக்கிறார்.

நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் கேன் வில்லியம்சன் 83 போட்டிகளில் 24 சதங்கள் அடித்திருக்கிறார். அதே நேரம் விராட் கோலி 87 டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்கள் அடித்திருக்கிறார். கேன் வில்லியம்சன் 53 சராசரியுடன் 32 அரை சதங்களும், விராட் கோலி 53.41 சராசரியுடன் 23 அரை சதங்களும் அடித்துள்ளனர். ஜனவரி 1, 2018 முதல் கடந்த மூன்று ஆண்டுகளில், வில்லியம்சன் 20 டெஸ்ட் போட்டிகளில் ஏழு சதங்களை அடித்துள்ளார், அதில் அவருடைய சராசரி 67.89 ஆகும். அதே காலகட்டத்தில், கோலி 24 டெஸ்ட் போட்டிகளில் இவரும் ஏழு சதங்களை அடித்தார் மற்றும் அவரது சராசரி 52.56 ஆக உள்ளது.

வெளிநாடுகளில் நடைபெற்ற 36 போட்டிகளில் வில்லியம்சன் 2,680 ரன்களுடன் 9 சதங்கள் எடுத்துள்ளார். அதன் சராசரி 42.53 ஆகும். விராட் கோலி 48 வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் 3,760 ரன்களுடன் 14 சதங்கள் அடித்திருக்கிறார். அதனுடைய சராசரி 44.23 ஆகும். வில்லியம்சன் ஆஸ்திரேலியாவில் இரண்டு சதங்களும், இந்தியா மற்றும் இங்கிலாந்தில் தலா ஒரு சதமும் அடித்திருக்கிறார்கள். அவர் இன்னும் தென்னாப்பிரிக்காவில் மண்ணில் 3 டிஜிட் ரன்களை எட்டவில்லை. அதே நேரம் கோலி ஆஸ்திரேலியாவில் ஆறு சதங்களையும், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் தலா இரண்டு மற்றும் நியூசிலாந்தில் ஒரு சதமும் அடித்திருக்கிறார். இந்தியாவில் நடந்த ஏழு டெஸ்ட் போட்டிகளில், வில்லியம்சன் ஒரு சதம் உட்பட 461 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்தில் நடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில், கோலி ஒரு சதம் உட்பட 252 ரன்கள் எடுத்துள்ளார்.

கோலியின் சாதனையை வில்லியம்சன் முறியடிக்க வாய்ப்புள்ளதா?

கேன் வில்லியம்சனுக்கு தற்போது 30 வயது ஆகிறது. விராட் கோலிக்கு 32. ஆனால் இந்தியாவை போல நியூசிலாந்து அடிக்கடி டெஸ்ட் போட்டிகளில் அதிகம் விளையாடுவது கிடையாது. ஜனவரி 1, 2015 முதல் கடந்த ஆறு ஆண்டுகளில், கோலியின் 55 போட்டிகளுடன் ஒப்பிடும்போது வில்லியம்சன் 45 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்தியாவை போல இல்லாமல் நியூசிலாந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் அதிகம் பங்கேற்பது கிடையாது. தற்போது நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது நியூசிலாந்தின் வானொலி வர்ணனையாளர்கள், நிதி சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் நியூசிலாந்து பல டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கு வெளிப்படையாகவே தயக்கம் காட்டுவது குறித்து விவாதித்தனர். நியூசிலாந்தை பொறுத்தவரை ரக்பி தான் அங்கு முக்கிய விளையாட்டு. மேலும் நேர அளவீடும் அவர்களுக்கு ஒரு சிக்கலாக உள்ளது.

நியூசிலாந்து இந்தியாவை விட ஏழரை மணி நேரமும், ஜிஎம்டியை விட 13 மணி நேரமும் முன்னிலையில் உள்ளது. நேர வேறுபாடு இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பார்வையாளர்களைப் பாதிக்கிறது, இவை தான் கிரிக்கெட் அதிகம் பார்க்கும் இரண்டு முக்கிய இடங்கள். இது குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒளிபரப்பு ஒப்பந்தங்களை மோசமாக பாதிக்கிறது. நடைபெற்று முடிந்துள்ள பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் தொடர் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்தின் கடைசி ஆட்டமாகும்.

இதற்கிடையே தன்னுடைய மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு விராட் கோலி நாடு திரும்பி விட்டார். இருப்பினும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிவடையும் முன் விராட் கோலி இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரையும் தவிர, ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 75 டெஸ்ட் போட்டிகளில் 26 சதங்களுடன் கோலிக்கு மிக அருகில் இருக்கிறார். ஸ்மித் இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட இருக்கிறார். ஆனால் தற்போது பார்ம் அவுட்டில் இருக்கும் ஸ்மித் மீண்டு வந்து விராட் கோலியின் எண்ணிக்கையை இந்த தொடரிலேயே எட்டுவாரா என்பது சந்தேகமே. மேலும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் 84 டெஸ்ட் போட்டிகளில் இருந்து 24 சதங்களை அடித்து அவரும் இந்த ரேஸில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பர்சனல் ஃபினான்ஸ்37 நிமிடங்கள் ago

நீங்கள் எந்த ITR படிவம் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்2 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கல் செய்துவிட்டீர்களா? ரீஃபண்டு எப்போது கிடைக்கும் தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்2 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?

வணிகம்11 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா22 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்22 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

உலகம்3 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!