தமிழ்நாடு
‘பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், குறுக்க யார் வந்தாலும்…. ‘ கே.பி முனுசாமி காட்டம்
எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்றும் இதற்கு குறுக்கே யார் வந்தாலும் அவர்களை ஒதுக்கி விடுவோம் என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி நேற்று அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களுடைய தலைமை முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை தான் நிறுத்துகிறது. ஓ. பன்னீர்செல்வம் கூறிய வேதவாக்கும் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான். இதற்கு குறுக்கே யார் வந்தாலும் அவர்களை ஒதுக்கி விடுவோம் என்றார்.
பின்னர் பொங்கல் பரிசு டோக்கன்களில் அமைச்சர்கள் படம் பொறிக்கப்பட்டிருக்கும் சர்ச்சைகளுக்க பதிலளித்த அவர், அரசு அதிகாரிகள் மூலமாக மட்டுமே பொங்கல் பரிசு டோக்கன் விநியோகிக்கப்பட்டதாக கூறினார். புதிதாக கட்சி தொடங்கும் அனைவரும் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று சொல்கிறார்களே தவிர, கலைஞர் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று சொல்வதில்லை என்றும் சாடினார்.