சினிமா செய்திகள்
நடிகர் விக்ரம் பிரபுவின் ‘புலிகுத்தி பாண்டி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
நடிகர் விக்ரம் பிரபுவின் புலிக்குத்தி பாண்டி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
புலிக்குத்தி பாண்டி படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார். கும்கி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகம் ஆன விக்ரம் பிரபுவும் லட்சுமி மேனனும் மீண்டும் இந்தத் திரைப்படம் மூலம் இணைந்து உள்ளனர்.
இத்திரைப்படத்தை கொம்பன், குட்டிப்புலி, மருது, தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா தான் புலிக்குத்தி படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்துக்கு ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
புலிக்குத்தி பாண்டி #PulikkuththiPandi pic.twitter.com/Dm5pIXLRw9
— Muthaiya (@dir_muthaiya) December 30, 2020