தமிழ்நாடு
பொங்கல் பரிசு டோக்கனில் அதிமுக அமைச்சர் படங்கள்! நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திமுக
![Pongal Token - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/Pongal-Token.jpg)
தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகையாக 2,500 ரூபாய் அறிவித்து உள்ள நிலையில் தற்போது அதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திமுக அமைப்புச்செயலாளர் பாரதி, சென்னை உயர்நீதி மன்றத்தில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் புகைப்படங்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கனில் இடம்பெற்று உள்ளது கண்டனத்திற்கு உரியது என்று வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இவ்வழக்கு குறித்து திமுக சார்பில் வெளியிடபட்டுள்ள அறிக்கையில் பொங்கல் பரிசுத்தொகை சரியான முறையில் மக்களை சென்று அடைவது கேள்விகுறியாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் வரவிற்கும் சமயத்தில் இது போன்ற செயல்பாடுகள் கண்டனத்திற்கு உரியது என்றும் பலதரப்பு மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இது பற்றி அதிமுக தலைமை எந்த வித அறிக்கையும் வெளியிடவில்லை. இலவசங்கள் வழங்கப்படும் நேரத்தில் அரசியல் நோக்கங்கள் இருக்க கூடாது என்பது அரசியல் அமைப்பு சட்டவிதி ஆகும். மக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய அரசு இது போன்ற செயலில் ஈடுபடுவது சட்டத்திற்கு புறம்பானது.