தமிழ்நாடு
திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவுக்கு கொரோனா!
திமுக முதன்மை செயலாளர் கேன்.என்.நேருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, சமீபத்தில் நடைபெற்ற கட்சி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். சென்ற வாரம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்திலும் பங்கேற்றார்.
இந்நிலையில், இன்று கே.என்.நேருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. ஆனால் எந்த மருத்துவமனை என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.