தமிழ்நாடு
‘ச்சீமானே… செஞ்சிடுவோம்..!’- வெடிக்கும் விஜய் ரசிகர்கள் #Viral
![Vijay Seeman - Bhoomitoday Vijay Seeman](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/Untitled-52.jpg)
நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சினிமா துறையில் இருந்து நேரடியாக தேர்தல் களத்துக்கு வரும் நடிகர்களை விமர்சித்தார். பொதுவாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்றுப் பேசும் சீமான், நேற்று அவரையும் விமர்சித்தார். இதனால் கொதிப்படைந்த விஜய் ரசிகர்கள், சீமானுக்கு எதிராக போஸ்டர்களை அச்சடித்து, வைரலாக்கி வருகின்றனர்.
முன்னதாக நிருபர்களுடனான சந்திப்பில் சீமான், ‘இந்த நிலத்தில் மக்களை சந்திக்காமல், அரசியல் செய்யாமல், அரசியல் களத்தில் நிற்காமல் நேரடியாக தேர்தலுக்கு வருவேன் என்று ரஜினி சொல்வதை ஒரு நாளும் ஏற்க முடியாது. தன்மானம் உள்ள எந்தத் தமிழனாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. வரும் தேர்தலில் ரஜினி மற்றும் கமலுக்கு விழும் அடி என்பது, இனி எந்த நடிகனும் தமிழக அரசியலுக்கு வர அச்சப்படும் வகையில் இருக்க வேண்டும்’ என்று ஆவேசமாக பேசினார். அதற்கு ஒரு நிருபர், ‘அனைத்து நடிகர்கள் என்றால், அதில் விஜய்யும் அடக்கமா?’ என்று கேட்டார். ‘அனைவரையும் சேர்த்துதான் சொல்கிறேன்’ என்றார்.
பொதுவாக விஜய்க்கு தார்மீக ரீதியில் ஆதரவு கொடுக்கும் நிலைப்பாட்டை எடுத்தவர் சீமான். ஆனால், தற்போது அவருக்கு எதிராக சீறியுள்ளது பலரை வியப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. விஜய்க்கு எதிராக சீமான் பேசியது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத விஜய்யின் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் போஸ்ட்கள் இதோ:
My God….Such language !!!
Completely shocking !! pic.twitter.com/arOcybbbsw
— சுமக்காத ராமன் (@CarryingRaman) December 23, 2020
My God…
This is growing worse..
Seeman Vs Vijay pic.twitter.com/xLONojLkS9
— சுமக்காத ராமன் (@CarryingRaman) December 23, 2020