Connect with us

சினிமா

சிம்பு, கெளதம் கார்த்திக் இணையும் ‘பத்து தல’! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published

on

Pathu thala

ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா வழங்கும் “சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை” புகழ் ஓபிலி N. கிருஷ்ணா இயக்கத்தில் எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து “பத்து தல” படத்தில் நடிக்கின்றனர்.

தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் வித்தியாசமான முயற்சிகள் மற்றும் தொடர் வெற்றி படங்களால் தென்னிந்திய சினிமாவின் மதிப்புமிகு அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. 15 வருட வெற்றிகரமான திரைப்பயணத்தில், அவரது தயாரிப்பில் வரிசையில் இருக்கும் அடுத்த கட்ட படங்கள், கண்டிப்பான வெற்றிப்படங்களுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

எஸ் டி ஆர் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க ஓபிலி N. கிருஷ்ணா இயக்கத்தில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா ஸ்டுடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்திற்கு “பத்து தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஓபிலி N. கிருஷ்ணா அவர்களும் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜாவும் திரையுலகில் ஒன்றாக பயணத்தை தொடங்கியவர்கள். நீண்ட காலத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

‘காட்டேரி’ பட வெளியீட்டை தள்ளி வைத்த ஸ்டூடியோ க்ரீன்!

இது குறித்து தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா கூறியதாவது,

ஸ்டுடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் சார்பில் பிரமாண்ட இப்படத்தை அறிவிப்பது பெருமையாக உள்ளது. எஸ் டி ஆர் அதீதமான சுறுசுறுப்புக்கும், உற்சாகத்திற்கும் பெயர் பெற்றவர் தற்போது தன்னையே முழுதாக மாற்றி வேறொரு பரிணாமத்தில் படு உற்சாகமாக அவர் வந்து நிற்பது, பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இத்திரைப்படம் முடிவான உடனேயே அவரது கதாப்பாத்திரத்தை ஒட்டி, மிகச்சரியான, அதிரடியான தலைப்பை தேடினோம். பல்வேறு பெயர்களை பரிசீலித்த பின்னால் “பத்து தல” தலைப்பு உறுதிசெய்யப்பட்டது.

ரசிகர்கள் படம் பார்க்கும் தலைப்பின் அர்த்தத்தை அதன் ஆழத்தை படம் வழியே கண்டிப்பாக உணர்வார்கள். கௌதம் கார்த்திக் ஸ்டுடியோ க்ரீன் (Studio Green) நிறுவனத்துடன் ஏற்கனவே பணிபுரிந்துள்ளார். எங்களை பொறுத்தவரையில் அவர் எங்கள் குடுமபத்தில் ஒருத்தர். “பத்து தல” படத்தில் அவரது பாத்திரம் வெகு கனமானது. அவரது திரை வாழ்வில் இப்படம் அவருக்கு மிகப்பெரும் பெயரை பெற்றுத்தரும் படமாக இருக்கும்.

எனது முதல் தயாரிப்பான “சில்லுனு ஒரு காதல்” திரைப்படத்தை இயக்கிய காலத்திலிருந்து, இயக்குநர் ஓபிலி N. கிருஷ்ணா அவர்களும் நானும் பல்லாண்டுகளாக நல்லதொரு நட்புறவினை பேணி வருகிறோம். திரையுலகின் பெரும் ஆளுமைகள் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் மேலும் பல ஆச்சர்யங்களும் இணையவுள்ளது. அது பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா14 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்15 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா15 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்15 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!