சினிமா செய்திகள்
பாலிவுட்-ல் அறிமுகமாகும் விஜய் தேவரகொண்டா பட நாயகி ராஷ்மிகா..!
![rashmika - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/rashmika.jpg)
நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட் பட உலகில் அறிமுகம் ஆகிறார்.
நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் மிஷன் மஜ்னு என்னும் திரைப்படம் மூலம் ராஷ்மிகா பாலிவுட் திரை உலகில் கால் பதிக்கிறார். முதன்முதலாக கன்னட சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா அங்கிருந்து தெலுங்கு, தமிழ் திரை உலகில் பயணித்து தற்போது பாலிவுட்டை எட்டியுள்ளார்.
பாகிஸ்தானுக்குள் இருந்து கொண்டு பணியாற்றும் ஒரு இந்திய ரா ஏஜெண்ட் ஆக இந்தப் படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். ராஷ்மிகாவுக்கு அடுத்தடுத்த பட வெளியீடுகளும் தயாராக உள்ளன. தெலுங்குவில் அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா, தமிழில் நடிகர் கார்த்தி உடன் சுல்தான் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
Inspired by real events, the story of India’s most daring RAW mission inside Pakistan! #MissionMajnu@SidMalhotra @RonnieScrewvala @amarbutala #GarimaMehta @RSVPMovies @GBAMedia_Off #ShantanuBagchi @aseem_arora @Sumit_Batheja #ParveezShaikh @pashanjal pic.twitter.com/AgvSWCIz5i
— Rashmika Mandanna (@iamRashmika) December 23, 2020