தமிழ்நாடு
‘மய்யம்’ மேடையில் குத்தாட்டம்; ‘இதான் தமிழகத்தை சீரமைக்கிறதா?’- வெளுக்கும் நெட்டிசன்ஸ்
‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்னும் முழக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மய்யம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுக் கூட்டம் ஒன்றில், சினிமா பாட்டு போட்டு குத்தாட்டம் ஆடப்பட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
பல்வேறு ஊர்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வரும் கமல், ‘கூடிக் கலையும் கும்பல் அல்ல. கூட்டி வரப்பட்ட கூட்டமும் அல்ல. இது சரித்திரம் படைக்கத் துணிந்தவர்களின் சங்கமம். புறக்கணிப்புகளை எதிர்த்து அழுத்தமான குரல் தமிழகத்திலிருந்து வந்தே தீரும் அது மக்களின் குரலாக இருக்கும்.
விலை கொடுத்து ஓட்டு வாங்கும் இந்த சூழலில்,விலை கொடுக்காமல் வெற்றி பெறுவதற்கு உண்டான உங்களுடைய யோசனைகள்? எங்கள் அரசியல் பிற அரசியல்வாதிகளுக்கும் வரவிருக்கும் அரசியல் இளைஞர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்’ என்று பேசி வருகிறார் கமல். ஆனால், அவரின் கட்சி ஒருங்கிணைக்கும் கூட்டங்களிலும் குத்தாட்டம் போடுவதைக் கண்ட நெட்டிசன்ஸ், கமலை டேக் செய்து தூற்றி வருகிறார்கள்.
வீடியோவைப் பார்க்க:
தமிழகத்தை சீரமைப்போம்……#maiam #Kamalahasan @Deva_ICL pic.twitter.com/mZHSj77chf
— Rajesh (@rrrajeshsmart) December 23, 2020