Connect with us

சினிமா செய்திகள்

‘தப்பு பண்றவன்லாம் உள்ள இருக்கான்’! – அர்ச்சனா வெளியேற்றத்தால் அனத்திய ரியோ, சோம்

Published

on

BiggBoss Archana Evicted

Biggboss Archana Evicted: பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து ‘லவ் பெட்’ குரூப் அல்மோஸ்ட் வெளியேற்றப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் நிஷாவை வீட்டுக்கு அனுப்பிய பிக்பாஸ், நேற்று(டிச.20) ‘அன்பு’ குரூப்பின் தானைத் தலைவி அர்ச்சனாவை வெளியேற்றி இருக்கிறது.

பிக்பாஸ் பார்வையாளர்களில் பெரும்பாலானோர், அர்ச்சனா வெளியே செல்ல வேண்டும் என்று விரும்பியதின் எண்ணத்தை கடும் யோசனைக்கும், விவாதத்துக்கு மத்தியில் நிறைவேற்றி இருக்கிறார் பிக்பாஸ்.

அர்ச்சனாவும், ஆஜித்தும் குறைவான வாக்குகளை பெற்றிருந்த நிலையில், ஆஜித் தான் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அர்ச்சனாவின் அணுகுமுறை ரசிகர்கள் மத்தியில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான நிலையில் அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

தயாராகும் போடா போடி-2… சிம்புவுக்கு ஜோடியாக ஹிந்தி பட நாயகி..!

முதலில் நிகழ்ச்சியின் ஸ்பான்சர்கள் அர்ச்சனாவை வெளியேற்ற வேண்டாம் என்பதையே தங்கள் கருத்தாக முன்வைத்ததாக தெரிகிறது. அவர் கன்டென்ட் கொடுப்பதால், மக்களின் எதிர்ப்பையும் மீறி அர்ச்சனாவை சேவ் செய்யலாம் என்று விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இறுதியில், அர்ச்சனா வெளியேறிய பின், துக்கம் தொண்டையை அடைத்து சீக்ரெட் ரூமிற்கு சென்று, அன்பு கேங்கில் மிச்சமிருக்கும் ரியோ, சோம், கேபி ஆகியோர் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆவேசமடைந்த சோம், ‘என்னடா நடக்குது இங்க? தப்பு செய்றவன்லாம் உள்ள இருக்கான். அர்ச்சனா வெளியே போறா! எனக்கு ஒண்ணுமே புரியல! என்று புலம்ப, அதற்கு ஆக்ரோஷ தொனியில், ‘அதான்! நீதி, நேர்மை, நியாயம்-லாம் உள்ள இருக்குல்ல’ என்று காரணம் கற்பித்துக் கொண்டிருந்தார் ரியோ.

இனி என்ன செய்யப் போகிறோம் என்று புலம்பியவாறே அவர்கள் இருந்ததை நாம் பார்க்கும் போது, அர்ச்சனா இத்தனை நாள் இவர்களுக்கு எப்படி ஒரு முதுகெலும்பாக இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது.

அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்த விடாமல், அன்பு என்ற பெயரில் விபூதி அடிப்பது, மசாஜ் செய்வது, துணி துவைத்து கொடுப்பது என்று, அவர்களை தன் கைக்குள்ளேயே வைத்து ஆட்டுவித்து சென்றிருக்கிறார்.

விக்னேஷ் சிவன் படத்துக்காக உடல் எடையைக் குறைத்த விஜய் சேதுபதி..!

ஆனால், எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் பாலாஜி சொன்ன கமெண்ட் தான் நேற்றைய ஹைலைட். வெளியே மீதமிருக்கும் அன்பு கேங் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, உள்ளே இருந்த பாலாஜியோ,

‘சரி! அர்ச்சனா அக்கா போயாச்சு! இனி சோத்துக்கு என்ன பண்றது!? என்று கலங்க பிக்பாஸே ஒரு நொடி, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என்று நினைத்திருப்பார்.

இந்தியா5 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்5 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!