தொழில்நுட்பம்
ஜொமேட்டோ ரொம்ப மோசம்… ஃப்ளிப்கார்ட் பெஸ்ட்!- டிஜிட்டல் நிறுவன ரேங்கிங் வெளியீடு!
ஆன்லைன், ஆப்ஸ் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுள் சிறந்த நிறுவனம் ஆக ‘அர்பன் கம்பெனி’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
fairwork என்னும் ஐரோப்பிய நிறுவனம் ஒன்று சர்வதேச அளவில் டிஜிட்டல் தொழில் நிறுவனங்களுகான தரவரிசைப் பட்டியலை ஆய்வின் மூலம் வெளியிடுகிறது. இந்தியாவுக்கான இந்த ரேங்கிங் பட்டியலில் சிறந்த நிறுவனமாக அர்பன் கம்பெனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குத் தேவையான அத்தனை சேவைகளும் இந்த அர்பன் கம்பெனி ஆப் மூலம் பெறலாம்.
இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் ஃப்ளிப்கார்ட்-ன் இ-கார்ட், மூன்றாம் இடத்தில் டன்சோ ஆகிய தளங்கள் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் க்ரோஃபர்ஸ், அமேசான், பிக் பாஸ்கெட், ஹவுஸ் ஆஃப் ஜாய், ஓலா, ஸ்விகி, உபெர் மற்றும் ஜொமேட்டோ உள்ளன.